Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழகு நிலையத்தில் பெண்ணை தாக்கிய செல்வகுமார் - ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

Advertiesment
அழகு நிலையத்தில் பெண்ணை தாக்கிய செல்வகுமார் - ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை
, வியாழன், 13 செப்டம்பர் 2018 (13:04 IST)
பெரம்பலூரில் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணை கடுமையாக தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் மீது திமுக நடவடிக்கை எடுத்துள்ளது.

 
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யா. இவர் வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அந்த அழகு நிலையத்தில் புகுந்த பெரம்பலூர் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் சத்யாவை சராமரியாக அடித்து உதைத்தார். கீழே விழுந்த சத்யாவை அவரது வயிறு மற்றும் முதுகில் தனது காலால் எட்டி எட்டி உதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 
 
வலி தாங்க முடியாமல் சத்யா கதறுகிறார். ஆனாலும், பெண் என்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி மீண்டும் மீண்டும் அவரை செல்வகுமார் எட்டி எட்டி உதைக்கிறார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.  
 
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சத்யாவை செல்வகுமார் தாக்கியிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே பிரியாணிக்காக யுவராஜ் என்பவர் பாக்சிங்கில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது திமுக கவுன்சிலர் ஒரு பெண்ணை அடித்து உதைத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், திமுக அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளிலுருந்தும் செல்வகுமார் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அவரிடம் விளக்கம் கேட்கப்படும். அது திருப்தி அளிக்கவில்லை எனில், அவர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பெற்றோர் தற்கொலை