Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் 370-ஐ நீக்கியது தவறு அல்ல: முக ஸ்டாலின் திடீர் பல்டி!

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (20:40 IST)
மத்திய அரசு சமீபத்தில் காஷ்மீரில் 370 என்ற சிறப்பு அந்தஸ்து பிரிவை நீக்கியது. இதனை அடுத்து அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை திமுக மற்றும் பாகிஸ்தான் தவிர வேறு எந்த பெரிய கட்சியும் நாடுகளும் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் சமீபத்தில் திமுக எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் டெல்லியில் இந்த சட்டப்பிரிவை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஒரு சில எம்பிக்கள் மட்டுமே கலந்து கொண்டதால் போராட்டம் பிசுபிசுத்ததாக கூறப்படுகிறது 
 
 
இந்த நிலையில் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது தவறு என டெல்லியில் போராடவில்லை என்றும், கையாண்ட விதம்தான் தவறு என்றும், முறையாக இந்த சட்ட நீக்கம் அமல்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டவே போராடினோம் என்றும் இன்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார். 
மேலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார் 
 
 
காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கு ஆரம்பம் முதல் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது திடீரென இந்த சட்டத்தை நீக்கியதற்கு போராடவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி, திடீர் பல்டி அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்