Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவறுகளுக்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக குற்றச்சாட்டு!

தவறுகளுக்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக குற்றச்சாட்டு!

Advertiesment
தவறுகளுக்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக குற்றச்சாட்டு!
, புதன், 26 அக்டோபர் 2016 (09:34 IST)
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க திமுக நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. இந்த கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த கூட்டம் ஒரு நாடகம் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.


 
 
இதனையடுத்து அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பின்னர் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடந்தது சர்வ கட்சி கூட்டமா? திமுக கூட்டணிக் கட்சிகள் அல்லது அந்தக் கூட்டணியில் சேரத் துடிப்பவர்களைத் தவிர யாரும் பங்கேற்கவில்லையே. எனவே இந்தக் கூட்டத்தால் விவசாயிகளுக்கோ, தமிழக மக்களுக்கோ எந்த பலன் கிடைக்கப்போவதில்லை.
 
காங்கிரஸும், திமுகவும் கடந்த 40 வருடமாக பொறுப்பில் இருந்திருக்கிறது. காவிரிப் பிரச்னையில் என்னென்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்பதை பட்டவர்த்தனமாக தமிழக மக்களுக்குத் தெரிவியுங்கள். அதனால்தான் வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியிருக்கிறேன்.
 
பழையதை மறந்து, இப்போதாவது எல்லாக் கட்சிகளும் ஒருங்கிணையலாமே என்கிறார்கள். முதலில், இதுவரை செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கட்டும். அதன்பிறகு யோசிப்போம். இத்தனை ஆண்டுகாலம் நடந்த சீரழிவுக்கு யார் காரணமோ அந்தக் காங்கிரஸை அருகில் வைத்திருக்கிறார். இதுவரை நடந்த தவறுகளுக்கும் துரோகங்களுக்கும் காங்கிரஸ் துணையாக இருந்தது. இப்போதும் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுதான் உள்ளது.
 
கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தவர். 12 மத்திய மந்திரிகள் இருந்தார்கள். அப்போதெல்லாம் இந்தப் பிரச்னையை கண்டுகொள்ளவில்லை. மீண்டும், இப்போது அவர்களை நம்பி போலியான நம்பிக்கையை தமிழக மக்களுக்குக் கொடுக்க வேண்டுமா? அதற்கு எல்லாக் கட்சிகளும் துணைபோக வேண்டுமா? அரசாங்கம் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியிருந்தால் எல்லோரும் கலந்துகொண்டிருப்பார்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்திருப்பார்கள் என பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் புகைப்படம் தமிழகத்தை ஆள்கிறது: புதிய சர்ச்சை!