திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

Mahendran
புதன், 11 ஜூன் 2025 (14:01 IST)
2026 தேர்தல் முடிவு குறித்து திமுக ரகசிய சர்வே எடுத்துள்ளதாகவும், சர்வதேச நிறுவனம் ஒன்று எடுத்த அந்த சர்வேயின் முடிவு திமுகவுக்கு சாதகமாக இல்லை என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
 
2026 தேர்தல் முடிவு மூன்று வகையாக வரலாம் என்று அந்த சர்வே முடிவு வெளியாகி உள்ளதாக மணி கூறியுள்ளார்:
 
ஒன்று திமுக தனித்து பெரும்பான்மை பெறாமல், கூட்டணி மூலம் பெரும்பான்மை பெரும். இரண்டாவது அதிமுகவும் தனித்து பெரும்பான்மை பெறாமல், கூட்டணி மூலம் பெரும்பான்மை பெரும். மூன்றாவதாக இரண்டு கூட்டணிகளும் பெரும்பான்மை இல்லாமல் "தொங்கு சட்டசபை" அமையும்.
 
"திமுகவுக்கு அதிமுக கூட்டணியை விட விஜய் தான் மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்றும், அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் சேர்ந்துவிட்டால் திமுகவின் தோல்வி உறுதி என்றும்," அவர் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார். 
 
மொத்தத்தில் 2026 தேர்தல் வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்றும், அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி வாக்காளர்களுக்கும் இந்தத் தேர்தல் ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments