Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக ஆட்சி என்றாலே நில ஆக்கிரமிப்பு .. .-அண்ணாமலை டுவீட்

திமுக ஆட்சி என்றாலே நில ஆக்கிரமிப்பு ..  .-அண்ணாமலை டுவீட்
, சனி, 26 ஆகஸ்ட் 2023 (20:31 IST)
''நெல்லை மாவட்டம் சங்கர் நகர் பகுதியில் உள்ள திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான பேச்சி பாண்டியன் எனும் நபர், இன்னொருவருக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து, அதனை எதிர்த்த நில உரிமையாளர்கள் தந்தை, மகன் இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்'' என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’நெல்லை மாவட்டம் சங்கர் நகர் பகுதியில் உள்ள திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான பேச்சி பாண்டியன் எனும் நபர், இன்னொருவருக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து, அதனை எதிர்த்த நில உரிமையாளர்கள் தந்தை, மகன் இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

இவரது தாக்குதலில் காயமடைந்த தந்தை, மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல், நிலத்தின் உரிமையாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பேச்சி பாண்டியன் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி வருகிறது திமுக. இவர் மீது மேலும் பல நில ஆக்கிரமிப்புப் புகார்கள் இருப்பதாகத் தெரிகிறது.

ஆனாலும், சட்டத்திற்குப் பயப்படாமல் தொடர்ந்து சமூக விரோதச் செயல்களை செய்யும் தைரியம் இவருக்கு எங்கிருந்து வருகிறது? உடனடியாக, காவல்துறை இந்த நபரைக் கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். திமுக ஆட்சி என்றாலே நில ஆக்கிரமிப்பு என்பது இத்தனை ஆண்டு கால வரலாறாக இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’’என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி