Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறை கூவல், காக்கா கூவல் ஆகிவிட்டது! – அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

Advertiesment
அறை கூவல், காக்கா கூவல் ஆகிவிட்டது! – அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
, செவ்வாய், 24 டிசம்பர் 2019 (17:23 IST)
நேற்று சென்னையில் நடைபெற்ற திமுக பேரணி குறித்து தனது கருத்தை கூறியுள்ளார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக அனைத்து கட்சி பேரணியை சென்னையில் நேற்று நடத்தியது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துதால் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேரணி ஒரு தொடக்கம்தான், கூட்டணி கட்சிகளோடு கலந்தாலோசித்து விட்டு மீண்டும் போராட்டம் அறிவிப்போம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மீன் வளத்துறை அமைச்சர் ” ஸ்டாலின் மக்களை போராட்டத்தில் கலந்து கொள்ள சொல்லி அறைக்கூவல் விடுத்தார். ஆனால் அது காக்கா கூவல் ஆகிவிட்டது.

தமிழக அரசின் முன்னெச்சரிக்கையால் திமுக பேரணியில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. பேரணி முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதால் வன்முறையை கிளப்பினால் கண்டு பிடித்து விடுவோம் என்பதால் திமுகவினர் யாரும் வன்முறையில் இறங்கவில்லை” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறார் ஆபாசப் படம் பார்த்த 72 வயது சென்னை தாத்தா கைது