வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுவதை அடுத்து திமுக கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சிக்கு 40க்கும் மேற்பட்ட இடங்களை கொடுத்தாலும் அந்த கட்சியினர் சரியாக தேர்தல் பணி பார்ப்பதில்லை என்றும் திமுகவினரின் தேர்தல் பணியில் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் எம்எல்ஏக்கள் ஆகிறார்கள் என்றும் திமுக வட்டாரத்தில் அதிருப்தி இருந்து வருகிறது.
எனவே 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட சில இடங்களில் திமுக போட்டியிட விரும்புவதாக கூறப்படும் நிலையில் 200 தொகுதிகளை இலக்காக வைத்து திமுக களமிறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக 200 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கங்களில் தான் தொகுதிகள் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுமா? அல்லது பேச்சு வார்த்தை நடத்தி அதிக தொகுதிகளை பெற்றுக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .
அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கும் ஒற்றை இலக்கங்களில் தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.