திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

Mahendran
திங்கள், 1 டிசம்பர் 2025 (10:52 IST)
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கு எதிராக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
 
தேர்தல் ஆணையம் தனது மனுவில், எஸ்.ஐ.ஆர். பணியானது தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி, வாக்காளர் பட்டியலில் தூய்மையை பேணவும், சுதந்திரமான தேர்தலை நடத்தவும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.
 
மேலும், திமுகவின் மனு விசாரணைக்கு தகுதியற்றது என்றும், "எஸ்.ஐ.ஆர். குறித்து தவறான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கடுமையாக விமர்சித்துள்ளது. 
 
எனவே, திமுக தாக்கல் செய்த இந்த மனுவை தக்க அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 86000ஐ தாண்டி உச்சம்..!

ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments