Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கணும்? நீங்களே சொல்லுங்க! – மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (16:55 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டியவை குறித்து திமுக மக்கள் கருத்தை கோரியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில் மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய திட்டங்கள், மக்களின் பகுதி சார்ந்த குறைகள் ஆகியவை இன்று திமுக கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் விரும்பும் கோரிக்கைகளை மக்களிடமிருந்து பெற்று அறிக்கையில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் திமுக அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை மக்கள் வழங்கலாம். அவையும் ஆய்வு செய்யப்பட்டு திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments