கனரா வங்கி படிவத்தில் தமிழ் இல்லாதது ஏன்? வங்கி மேலாளர் சொன்ன அடடே பதில்!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (16:12 IST)
பெரம்பலூர் அருகே கனரா வங்கி படிவத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளே இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் அது குறித்து வங்கி மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் இந்தி தெரியாததால் வங்கிக் கடன் வழங்க முடியாது என அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் வேறு கிளைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள நக்கசேலம் எனும் பகுதியில் இயங்கும் கனரா வங்கியிலும் இதுபோல பணம் எடுக்கும் மற்றும் செலுத்தும் படிவங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் மட்டுமே இருப்பதாகவும் அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பெரும்பாலான கிராமப் புற மக்களுக்கு இது சிக்கலாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இப்போது அதுகுறித்து அந்த வங்கியின் மேலாளர் பதிலளித்துள்ளார்.

அதில் ‘தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் இதே நடைமுறைதான் இருக்கிறது. மொழி பிரச்சனை இருந்தால் மனு கொடுக்க சொல்லி வாடிக்கையாளர்களிடம் அறிவித்திருக்கிறோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments