Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த செந்தில் பாலாஜி ஆதரவாளர்.. என்ன காரணம்?

Advertiesment
திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த செந்தில் பாலாஜி ஆதரவாளர்.. என்ன காரணம்?

Mahendran

, வியாழன், 1 பிப்ரவரி 2024 (13:54 IST)
பாஜகவில் இருந்த  மைதிலி வினோ என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் பாஜகவுக்கு தாவியுள்ளார்.  
 
தாமரை மலராது, கருகிவிட்டது என்று கூறி பாஜகவிடமிருந்து விலகி செந்தில் பாலாஜி ஆதரவாளராக மாறிய மைதிலி வினோ திமுகவில் இணைந்தார். ஆனால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் தனக்கு திமுகவில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும் தன்னை கட்சி சார்ந்த எந்த நிகழ்வுக்கும் அழைக்கப்படவில்லை என்றும் செந்தில் பாலாஜி கைதானதும் நான் அவருடைய ஆதரவாளர் என்பதால் ஓரம் கட்டப்பட்டேன்’ என்று கூறியுள்ளார்
 
இந்த நிலையில் பாஜகவிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்த நிலையில் தான் பாஜகவில் இணைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி இருக்கும் வரை திமுக கட்டுக்கோப்பாக இருந்தது என்றும் அவர் சிறைக்கு சென்ற பின்னர் கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
 
மேலும் திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள் அதிருப்தியாக உள்ளனர் என்றும் அதனால் தான் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாருதி சுசூகியின் முதலிடத்தை பறித்த டாடா நிறுவனம்!