Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவங்க வரலாற்றையே மாத்திடுவாங்க! – குடியரசு தலைவருக்கு எம்.பிக்கள் கடிதம்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:50 IST)
இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய உருவாக்கிய குழுவை கலைக்க சொல்லி 32 எம்.பிக்கள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவின் கலாச்சார தோற்றம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது. இந்த குழுவின் தமிழர்கள் யாரும் இல்லாமல் இருப்பது குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி எம்.பிக்கள் 32 பேரும் இணைந்து குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் இந்திய கலாச்சார தோற்றம் ஆய்வு செய்யும் குழுவில் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழில் இருந்து ஒருவர் கூட இல்லையென்றும், இதனால் வரலாறு திரிக்கப்படும் ஆபத்து இருப்பதால் ஆய்வு குழுவை கலைக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments