காவிரி பிரச்னை தொடர்பாக திமுக எம்.பி.,க்கள் பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என எதிர்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினால் முதல் கட்சியாக திமுக வர தயராக உள்ளது. ஆனால், அந்த முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபடவில்லை.
காவிரி பிரச்னை தொடர்பாக திமுக எம்.பி,க்கள் ஓரிரு நாட்களில் பிரதமர் மோடியை சந்திப்பார்கள். இன்னும் சில நாட்களில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து அவர்களது கருத்தை கேட்க உள்ளோம்.
அதன்படி தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசுக்கு அனுப்ப இருக்கிறோம். அதன் பிறகும் ஆளும் கட்சி செயல்படவில்லை என்றால் அவர்கள் செய்ய வேண்டிய பணியை திமுக செய்ய தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.