Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரம் படியுங்கள்: பாராளுமன்றத்தில் கனிமொழி..!

Advertiesment
இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரம் படியுங்கள்: பாராளுமன்றத்தில் கனிமொழி..!
, புதன், 9 ஆகஸ்ட் 2023 (17:26 IST)
இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரம் படியுங்கள் அதில் உங்களுக்கு தேவையான பாடம் உள்ளது என நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் போது திமுக எம்பி கனிமொழி பேசினார். 
 
பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடந்து வருகிறது. 
 
ராகுல் காந்திக்கு உட்பட பல எதிர்க்கட்சி எம்பிகள் இந்த தீர்மானத்தின் போது விவாதம் செய்த நிலையில் தற்போது திமுக எம்பி கனிமொழி பேசியுள்ளார். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்த்த கதை உங்களுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பிய கனிமொழி இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரம் படியுங்கள் என்றும் அதில் உங்களுக்கு தேவையான பாடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டின் வரலாறு தெரியுமா என்று ஆவேசமாக கனிமொழி கேள்வி எழுப்பி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி எது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களவையில் ‘பறக்கும் முத்தம்’ கொடுத்த ராகுல் காந்தி: சபாநாயகரிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் புகார்