Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

Advertiesment
திமுக

Siva

, வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (10:24 IST)
அமைச்சர் பொன்முடியின் கொச்சையான பேச்சுக்கு  திமுக எம்பி கனிமொழி தனது சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாதுவை குறிப்பிட்டு கொச்சையான சில கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த பேச்சுக்கு மேடையில் இருந்தவர்களும் பார்வையாளர்களும் முகம் சுழித்ததாக செய்திகள் வந்துள்ளன. சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன.
 
இந்த நிலையில், திமுக துணை பொதுச் செயலாளரும், திமுக எம்பியுமான கனிமொழி, அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
 
"அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காக பேசப்பட்டிருந்தாலும், இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
 
திமுகவின் மூத்த அமைச்சர் ஒருவர் பேசியதையே கனிமொழி கண்டித்திருப்பது, திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?