Publish Date: Sun, 09 Aug 2020 (14:52 IST)
Updated Date: Sun, 09 Aug 2020 (14:55 IST)
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் அதுகுறித்து ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுக பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாகவும், தான் உயர்பதவிகளை அடையவிடாமல் பலர் தடுத்ததாகவும் சமீபத்தில் ஒரு ரேடியோ சேனலுக்கு கு.க.செல்வம் கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திமுக எம்.பியான ஜெகத்ரட்சகன் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் பரவியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள எம்.பி ஜெகத்ரட்சகன் “நான் திமுக மீது அதிருப்திலும் இல்லை, பிரதமரை சென்று சந்திக்கவும் இல்லை. என்மீது சமூக வலைதளங்கள் மூலமாக வதந்தி பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது” என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
Prasanth Karthick
Publish Date: Sun, 09 Aug 2020 (14:52 IST)
Updated Date: Sun, 09 Aug 2020 (14:55 IST)