Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சூர்யாவின் கருத்துக்கு திமுக எம்.எல்.ஏ ஆதரவு ! ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
சனி, 20 ஜூலை 2019 (14:20 IST)
தேசிய கல்விக்கொள்கை வரைவு குறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இது அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. குறிப்பாக ஆளும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சூர்யாவின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின்  பேச்சுக்கு திமுக ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சூர்யாவின் கருத்துகள் சரியானவை என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் தேசியக் கல்விக்கொள்கை குறித்து ஆராய்வதற்க்காக திமுக அமைத்துள்ள ஆய்வுக்குழுவின் தலைவராக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனியார் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :
 
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்தான் நடிகர் சூர்யா ,தேசியக் கல்விக்கொள்கை குறித்து பேசியிருக்கிறார். அவர் தெரிவித்த கருத்துக்கள் சரியானவை.மக்களின் மனநிலையை அவர் பிரதிபலித்துள்ளார். அவர் கூரிய கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை என்றால் அதற்காக விளக்கத்தைன் தெரிவிக்கலாம்.ஆனால் தனிமனித தாக்குதலை ஏற்க முடியாது, மேலும் புதுக்கல்விக்கொள்கை பொதுத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளதே அந்த வரைவு மீது எல்லோரது கருத்துகளையும் கேட்கத்தான் என்று தெரிவித்துள்ளார்.
 
இதனால் சூர்யாவின் கருத்துக்கு திமுக தரப்பும், தற்போது திமுக எம் எல் ஏ ஆதரவு அளித்துள்ளதால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments