Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினர் இல்ல நிகழ்ச்சிகளில் இந்த படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் – தீர்மானம் நிறைவேற்றிய எம்.எல்.ஏ !

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2019 (10:23 IST)
திமுகவினரின் இல்ல சுபநிகழ்ச்சிகளில் கலைஞர், ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படம் மட்டுமே இடம்பெற வேண்டும் என ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ  வசந்தம் .கார்த்திகேயன்.

ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரான வசந்தம் க.கார்த்திகேயன் நேற்று திமுக நிர்வாகிகள், தொண்டர்களைக் கூட்டி செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் திமுக மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

திமுக வினரின் இல்ல திருமண நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ் அச்சடிக்கும்போது அதில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணி மாநிலச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படம் மட்டுமே அச்சடிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். கள்ளக்குறிச்சியில் அதிகமாகி வரும் பொன்முடியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவே அவர் இவ்வாறு தலைமையைக் குளிர்விக்கும் விதமாகப் பேசியுள்ளதாகவும் புதிதாக உருவாகியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் எனறும்தான் அவர் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்