Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பெண் எம்.எல்.ஏ தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (13:16 IST)
திமுக பெண் எம்.எல்.ஏ தற்கொலை முயற்சி
திமுக பெண் எம்எல்ஏ ஒருவர் தற்கொலை முயற்சி செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் திமுக எம்எல்ஏ பூங்கோதை. இவர் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியுடன் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் திடீரென திமுக எம்எல்ஏ பூங்கோதை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இதனை அடுத்து அவர் தற்போது நெல்லையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
திமுக எம்எல்ஏ பூங்கோதை எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற காரணம் இதுவரை இன்னும் தெரியவில்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திமுக எம்எல்ஏ பூங்கோதையின் தற்கொலை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சித் தலைமையுடன் பிரச்சனையா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments