Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை: டிஜிபி உத்தரவு

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (13:00 IST)
தமிழக காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை
உலகிலேயே விடுமுறை இல்லாமல் பணி செய்யும் ஒரே துறை காவல்துறை என்பதும் காவல் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு மற்ற அதிகாரிகள் போல் சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை எல்லாம் கிடையாது என்பதும் அனைத்து நாட்களும் பணியில் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காவல்துறையினர் பலர் மன அழுத்தம் ஏற்பட்டு விபரீதமான முடிவை எடுத்து வருவதை அடுத்து காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடப்பட்டு வந்தது
 
இந்த நிலையில் தமிழக காவல்துறையினர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார் சென்னை தவிர அனைத்து மாநகர காவல்துறை ஆணையர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து இனிமேல் காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை சுழற்சி அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments