Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவிடம் பணிந்து, சசிகலாவிடம் தவழ்ந்து... எடப்பாடியாரை கலாய்த்த ஸ்டாலின்

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (16:23 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களின் குறைகளை கேட்டு வருகிறார். அவ்வப்போது இந்த கூட்டங்களில் அதிமுக அரசை விமர்சிக்கவும் செய்கிறார். 
 
அந்த வகையில், சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வாக்குச்சாவடி திமுக முகவர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஸ்டாலின் பேசியது பின்வருமாறு,
 
தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, இந்தியாவில் மட்டும் இல்லை, வேற எங்கியுமே இது மாதிரியான கிராம சபை கூட்டத்தை யாருமே நடத்தியது கிடையாது. மக்களுக்கு பயன்படக்கூடிய, பயனளிக்கக்கூடிய வகையில் இப்படி ஒரு கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பினாமிகளுக்கு ஒப்பந்தங்களை தருகிறார். திட்டப்பணிகளுக்கு லஞ்சம், குட்கா ஊழல் என தொடர்கிறது. இது எல்லாவற்றையும் தாண்டி கொடநாட்டில் கொலை நடந்தது. அந்த கொலையை மறைப்பதற்காக 5 கொலைகள் நடந்தன.
 
ஜெயலலிதாவிடம் பணிவாக இருந்தவர், சசிகலாவிடம் தவழ்ந்து சென்று பதவியை பிடித்தவர் முதல்வர் பழனிசாமி, விரைவில் சிறைக்கு செல்ல உள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments