பினாமி ஆட்சிக்கு இவ்ளோ பில்ட் அப்: அதிமுகவை வாரிவிட்ட ஸ்டாலின்!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (16:14 IST)
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அதன் பின்னர் கிருஷ்ணகிரி,  தருமபுரி ஆகிய மாவட்டங்களும் சென்றார். 
 
அங்கு கூட்டப்பட்டிருந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியது பின்வருமாறு, தமிழகத்தில் அதிமுக அரசு தூங்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி நடத்தாமல், மத்திய அரசுக்கு பினாமி ஆட்சியாக இங்கு தமிழகத்தில் இருந்து வருகிறது. 
 
தமிழக சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 117 இடம் தேவை, தற்போது அதிமுகவின் பலம் 113 ஆக உள்ளது. இன்னும் 10 நாளில் 11 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு வர உள்ளநிலையில், எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தக்க வைத்து கொண்டிருக்கிறது. 
அதேபோல், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. ஆனாலும் இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சரே கேட்கிறார். அதேபோல, கொடநாடு கொலை சம்பத்தில் முதல்வருக்கு தொடர்பு உள்ளது என்று வாக்குமூலம் தருகிறார்கள். 
 
எனவே, அதிமுக ஆட்சி, லஞ்ச ஆட்சி மட்டுமல்ல, கொள்ளையடிக்கும் ஆட்சி மட்டுமல்ல, கொலைகார ஆட்சியாகவும் உள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்க்விட் கேம்' கேம் ஸ்டுடியோ மூடப்பட்டது: என்ன காரணம்?

சபரிமலையில் திருடப்பட்ட 4.5 கிலோ தங்கம் கர்நாடகாவில் விற்பனை செய்யப்பட்டதா? விசாரணையில் அம்பலம்

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

வங்கக் கடலில் 'மொந்தா' புயல் எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் அபாயக் கூண்டு!

பீகார் சட்டமன்ற தேர்தல்: என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? பிரதமர் மோடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments