உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்., 14 முதல் விருப்ப மனு - திமுக தலைவர் ஸ்டாலின்

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (14:17 IST)
தமிழகத்தில் கூடிய விரையில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. அதில் போட்டியிட  வரும் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்,இன்று,  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் வரும் 16 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மு. க. ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வரும் 14 ஆம் தேதிமுதல் 20 ஆம் தேதிவரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என கூறினார்.
 
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போடியிட விரும்புவோர், நவம்பர் 15,, 16 ஆகிய தேதிகளில் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில்  விருப்ப மனு பெறலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிமுக மாவட்ட தலைமையகத்தில் அளிக்கலாம்  என அதிமுக தலைமை நேற்று, அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்லா காரில் சென்றதால் தான் கல்லூரி மாணவி இறந்தாரா? பெற்றோர் வழக்கால் பரபரப்பு..!

இப்படி செய்வது ரொம்ப தப்பு.. அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்..!

அமெரிக்க அரசு முடக்கத்தால் இந்திய பங்குச்சந்தை பாதிப்பா? இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. நேற்று போல் மாலையில் உயருமா? இன்று ஒரு சவரன் எவ்வளவு?

இந்திய திரைப்படம் திரையிட்ட தியேட்டரில் துப்பாக்கி சூடு.. கனடாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments