Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு திமுக ரியாக்சன்..!

Siva
திங்கள், 28 அக்டோபர் 2024 (07:12 IST)
"காய்த்த மரம் தான் கல்லடி படும்" என விஜய்யின் விமர்சனத்திற்கு, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி பதில் அளித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பேசிய விஜய், "மக்கள் விரோத ஆட்சி நடத்திவிட்டு, 'திராவிட மாடல் ஆட்சி' என்று ஏமாற்றுகிறார்கள்" என்றும், "அவர்கள் பாசிச ஆட்சி என்றால், நீங்கள் பாயாச ஆட்சியா?" என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், "பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிடம் என்ற பெயரில் குடும்ப ஆட்சி நடத்துகிறார்கள்" என்றும், "அவர்களும் நம் கொள்கை எதிரிகள் தான்" என்றும், திமுகவை தனது எதிரி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும், "ஒரு அரசு வீடு, உணவு, வேலை ஆகிய மூன்றையும் கொடுக்க முடியவில்லை என்றால், அந்த அரசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்ன?" என்று விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் திமுக விமர்சனத்திற்கு பதிலளித்த ஆர். எஸ். பாரதி, "திமுக என்பது ஆலமரம்; காய்த்த மரத்தில் தான் கல்லடி படும். யார் கல்லு எறிந்தாலும், அதை தாங்கிக் கொள்ளும் சக்தி திமுகவிற்கு உள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசியலுக்கு யார் வந்தாலும், திமுகவையே விமர்சிக்கிறார்கள். விமர்சனங்களை எதிர்கொள்வோம்; அதே நேரத்தில் தக்க பதிலையும் கொடுப்போம்" என்று கூறியுள்ளார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments