திருப்பதி வெங்கடாசலபதி பெயரில் சீட் நடத்தி …திமுக பிரமுகர் பணம் மோசடி !

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (15:51 IST)
சூலூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 50 லட்சம் பணத்துடன் திமுக நகர துணைச்செயலாலர் ஜெயா மாயமாகியுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

கோவை மாவட்டம்ச் சூலூரில் வசித்து வந்தவர் ஜெயா. இவர் திமுக நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்நிலையில், இவர் 15 ஆண்டுகளாக திருப்பதி என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பணத்தைக் கொடுத்து சீட் பிடித்து வந்துள்ளனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக அவர் யாருக்கும் பணம் கொடுக்காமல் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் சரியாகச் சீட்டு கட்டாததால் நஷ்டமடைந்த  ஜெயா மாயமாகிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் போலீஸ் ஸ்டேசனில் புகாரளித்தனர். இதுகுறித்து போலீஸார்  இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments