Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிழல் கூடையை இடித்து தள்ளும் திமுக பிரமுகரால் பரபரப்பு.

Advertiesment
karur
, வெள்ளி, 8 ஜூலை 2022 (23:58 IST)
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட பேருந்து நிழல் கூடையை தற்போது இடித்து தள்ளும் திமுக பிரமுகரால் பரபரப்பு.
 
 
கரூர் அடுத்த வடக்கு பாளையம் பகுதியில் பேருந்து நிழற்கூடை ஒன்று கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்நிலையில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட இந்த நிழல் கூடையை திமுகவைச் சார்ந்த தாந்தோணி இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருமூர்த்தி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடித்துள்ளார். இந்நிலையில்,  அப்போதே,  பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு திருமூர்த்தி கட்டித்தருவதாக கூறிய நிலையில் இன்றுவரை நிழல் குடையை கட்டி தராததால் பொதுமக்கள் இன்று காலை கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் சுமார் 2 மணி நேரமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலை மறியலில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தாக்கிய சம்பவத்தில்  பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு,  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்  - திராவிட ரோல் மாடல் ஆட்சியில் நிழல் கூடையையும் ஆக்கிரமிக்கும் திமுக வினரால் சர்ச்சை.அதனைத் தொடர்ந்து சர்வேயர் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி இடத்தை அளந்தனர் அதனைத் தொடர்ந்து பேருந்து நிழல் கூடை ஏற்கனவே இருந்த அதே இடத்தில் கட்டித் தரப்படும் அதிகாரிகள் வாக்குறுதி நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுமட்டுமில்லாமல், பேருந்து நிழற்கூடையை திமுக பிரமுகர் இடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது பெருமளவில் வைரலாகி வருகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"குழந்தைக்கு பால் கூட வாங்க முடியாமல் தவிக்கிறேன்" - ஓர் இலங்கை தாயின் கண்ணீர் கதை