Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் செந்தில் பாலாஜி கையில் தான் திமுக உள்ளது-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு!

Advertiesment
அமைச்சர் செந்தில் பாலாஜி கையில் தான் திமுக உள்ளது-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு!

J.Durai

, செவ்வாய், 8 அக்டோபர் 2024 (13:31 IST)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
 
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
 
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ..... 
 
பிறப்பால் பதவி கிடைப்பது திமுக
உழைப்பால் பதவி கிடைப்பது அதிமுக.
 
கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலின் 
கருணாநிதி பேரன் , மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் என்ற பிறப்பால் பதவிக்கு வந்தனர்
மருத்துவத் துறையில் அதிக சாதனைகள் நிகழ்த்தி அதிக விருதுகளை பெற்றுத்தந்த ஒரை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தான்
 
தற்போதைய மருத்துவதுறை அமைச்சர் ம.சு. - மாசு ஏற்படுத்தி விட்டார் 
சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மருத்துவ துறையை கெடுத்து,மக்களின் வாழ்வினை கெடுத்து கொண்டிருக்கிறார்
 
கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை பிரதமர் மோடியே பாராட்டியுள்ளார்
 
அதிமுக ஆட்சி காலத்தில் 11 மருந்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது 
தற்போதைய திமுக ஆட்சியில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூட கொண்டு வரவில்லை.
 
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்து விட்டது.
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்றார்கள் அதை நிறைவேற்றவில்லை 
 
ஒரு செங்கலை தூக்கி கொண்டு அலைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு - செங்கல் நிதி என்று மக்கள் அழைக்கின்றனர் 
 
திமுக கூட்டணியில் இருக்கும் 39 எம்.பிக்கள் எய்ம்ஸ் மருத்துவ மனைக்காக   ஏன் குரல் கொடுக்கவில்லை 
 
செந்தில் பாலாஜி மீது பயத்தினால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது 
 
அமலாக்கத் துறையில் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தினால் அமைச்சர் பதவி வழங்கி உள்ளனர் 
 
செந்தில் பாலாஜி கெட்டிக்காரர் தான்
அமைச்சர் செந்தில் பாலாஜி கையில் தான் திமுக உள்ளது என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டணி கட்சிகளை மிரட்ட வேண்டும் என்பதற்காகவே மதுஒழிப்பு மாநாடு: பூவை ஜெகன்மூர்த்தி