Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை”.. ஹெச்.ராஜா ஆவேசம்

Advertiesment
”அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை”.. ஹெச்.ராஜா ஆவேசம்
, திங்கள், 9 செப்டம்பர் 2019 (12:56 IST)
அதிமுக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சிக்க திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என ஹெச்,ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி, லண்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாளை சென்னை திரும்புகிறார். அவரை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், விஜய பாஸ்கர், செங்கோட்டையன் ஆகிய அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.

இதனை குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ”தமிழக அமைச்சரவை சுற்றுலாத் துறை அமைச்சரவையாக மாறிவிட்டது” என கேலியாக விமர்சித்தார். மேலும் அதிமுக அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணத்தால் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை என திமுகவினர் தொடர்ந்து கூறி வந்தனர்.
webdunia

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கி வைத்த விழாவில் ஹெ.ச்.ராஜா பேசியபோது, ”தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளனர். இதே போல் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார், ஆதலால் அதிமுக அமைச்சர்களை விமர்சிக்க திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என திமுகவை விளாசி தள்ளினார். ஹெச்.ராஜாவின் இந்த கருத்து திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விளம்பர பலகைகளை அகற்றாவிட்டால் 3 ஆண்டுகள் சிறை!? – சென்னை மாநகராட்சி அதிரடி