சாத்தன்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: திமுக அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (11:50 IST)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று வணிகர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாத்தான்குளம் தந்தை மகனின் மரணத்தில் நீதி வேண்டும் என்று திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன
 
இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜெயராஜ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூபாய் 25 லட்சம் நிவாரணம் அளிக்க உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் நீதிக்கான போராட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும் என்றும் ஸ்டாலின் உறுதி கூறியுள்ளார் 
 
ஏற்கனவே சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த தந்தை மகன் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

585 வாக்குகள் மட்டுமே தேஜஸ்வி யாதவ் முன்னிலை.. விரட்டியபடி வரும் பாஜக வேட்பாளர்..!

ஐந்து கூட இல்லை பூஜ்ஜியம்.. பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சியை ஏற்று கொள்ளாத மக்கள்..!

பீகார் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி!.. 4 இடங்களில் மட்டுமே முன்னிலை...

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments