திமுகவின் தொடர் வெற்றிக்கு காரணம் கூட்டணி தான்: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

Siva
ஞாயிறு, 1 ஜூன் 2025 (15:37 IST)
மதுரையில்  திமுக பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில், திமுக தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு கூட்டணி ஒரு முக்கிய காரணம் என்று பேசினார்.
 
48 ஆண்டுகளுக்கு பிறகு, மதுரையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கட்சி கொடியை  முதல்வர் ஸ்டாலின் ஏற்றிய நிலையில், 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்பின் அவர் பேசிய போது, திமுகவின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கூட்டணி என்றும், தமிழ்நாடு வரலாற்றிலேயே ஒரு கூட்டணி இத்தனை தேர்தலுக்கு தொடர்ந்ததாக வரலாறு இல்லை என்றும் தெரிவித்தார்.
 
ஏழாவது முறையாக வெற்றி வாகை சூட வியூகம் வகிக்கும் பொது குழு தான் இது என்றும், "அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்திகள் வந்திருக்க வேண்டும்?" என்றால், "ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைத்தது, திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்றது, இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது" என்று தான் செய்தியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 
"கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை" என்று  ஆணவ குரலில் சொல்வது நான் அல்ல. என்னை பொருத்தவரை, பணிவே தலைமை பண்பின் அடையாளம். சொல்லை விட செயல் பெரிது. வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று தெரிவித்தார்.
 
சூரியன் நிரந்தரமானது. அது போன்று திமுகவும் நிரந்தரமானது. திமுக எப்படி நிரந்தரமானதோ, அதேபோல் திமுக ஆட்சியும் நிரந்தரமானது. அந்த நிலையை உருவாக்க நம்மால் முடியும், உங்களால் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments