Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பெருவாரியான தொகுதிகளில் திமுக முன்னணி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பெருவாரியான தொகுதிகளில் திமுக முன்னணி!
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (08:23 IST)
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் பெருவாரியான பகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னணியில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சற்று முன் வெளியான தகவலின்படி 107 பேரூராட்சிகளிலும் 15 நகராட்சிகளிலும் 4 மாநகராட்சிகளிலும் திமுக முன்னணியில் இருந்து வருகிறது. அதேபோல் அதிமுக 12 பேரூராட்சிகளில் மட்டும் அதிமுக முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது என்பதும், அதன்பின்னர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது
 
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் இதோ:
 
* சேலம் மாவட்டம் மேச்சேரி பேரூராட்சியில் 2, தெடாவூர் பேரூராட்சியில் 1, கொளத்தூர் பேரூராட்சியில் 1 என 4  திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு.
 
* திருநெல்வேலி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் 8 திமுக வேட்பாளர்களும்,  சுயேச்சை வேட்பாளரும் ஒருவரும் போட்டியின்றி தேர்வு.
 
* திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு.
 
* ராமநாதபுரம் நகராட்சி 7வது வார்டில் பிரவீன் தங்கம் 29வது வார்டு காயத்ரி ஆகிய இரண்டு திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு. மேச்சேரி ஊராட்சியில் இரண்டு திமுக பேர்களும் தெடாவூர், கொளத்தூர் பேரூராட்சியில் தலா 1 என 4 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
 
* திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டில் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு.
 
* புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி 6வது வார்டில் சர்மிலா பானு, இலுப்பூர் பேரூராட்சி 5வது வார்டில் தமிழ் ராஜா ஆகிய 2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு .
 
* உடுமலை நகராட்சி 14வது வார்டில் திமுக வேட்பாளர் மும்தாஜ் போட்டியின்றி தேர்வு.
 
* பொள்ளாச்சி பெரிய நெகமம் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு;
 
* 8 பேர் திமுக வேட்பாளர்கள் என்பதால், பெரும்பான்மை பலத்துடன் பெரிய நெகமம் பேரூராட்சியை கைப்பற்றுகிறது திமுக.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: முதல்கட்ட தேர்தல் முடிவுகள்!