Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்மொழிக்கு பதிலாக கனிமொழியை வளர்த்தீர்கள்: திமுகவை கிண்டல் செய்த் தமிழிசை

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (07:59 IST)
அதிமுக, திமுக என இரு கூட்டணியிலும் கட்சிகளை இணைக்கும் பணி முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்டமாக எந்தெந்த தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்குவது என்பது குறித்த ஆலோசனையில் அரசியல் கட்சிகள் உள்ளன.
 
இந்த நிலையில் நேற்று மக்களவை தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தையும் விறுவிறுப்புடன் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'திமுக தனது ஆட்சிகாலத்திலும், ஆட்சியில் இல்லாத காலத்திலும் தமிழ் மொழியை எங்கே வளர்த்தது? அதற்கு பதிலாக கனிமொழியைத்தான் வளர்த்தது என்று பேசினார்.
 
வரும் மக்களவை தேர்தலில் தூத்துகுடி தொகுதியில் போட்டியிட போகும் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிட போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கனிமொழியை நேரடியாக அட்டாக் செய்ய தமிழிசை முடிவு செய்துவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழிசையின் இந்த பேச்சுக்கு கனிமொழி என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments