Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கவுன்சிலர் தேவிபிரியா குடும்பத்துடன் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (11:06 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் தேவி பிரியா என்பவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 13வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த தேவி பிரியா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தேவிபிரியா தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். கணவன் மனைவி ஆகிய இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் இவர்களது ஒரே மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. 
 
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் தேவி பிரியா அவரது கணவர் மற்றும் மகள் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

பஞ்சாப் அணியில் என்ன பிரச்சனை.. திடீரென நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா..!

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments