Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் இந்தியில் இருப்பதா? திமுக கண்டனம்

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (17:14 IST)
வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் இந்தியில் இருப்பதா? திமுக கண்டனம்
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது 
 
சமீபத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள வாக்காளர் பட்டியல் குறித்த வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் இருக்கிறதா என்பதை அனைவரும் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் விடுபட்டவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை அளிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வாக்காளர்கள் பெயர் இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழில் வாக்காளர் பட்டியல் இல்லாமல் ஹிந்தியில் வாக்காளர் பட்டியல் பதிவு செய்தது ஏன் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments