களத்தில் இறங்கிய திமுக: அதிமுகவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (13:50 IST)
தேர்தலை மனதில் வைத்தே அதிமுக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்ததாகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
 
தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவியாக வழங்கும் சிறப்புத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
 
இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆளும் அதிமுக அரசு தேர்தலை மனதில் வைத்தே 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை வைத்து வாக்குகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளது.
 
ஆகவே இதனை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments