Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுகவை டார்ச்சர் செய்கிறதா தேமுதிக? கூட்டணி இழுபறி ஏன்? கசிந்த முக்கிய காரணம்

Advertiesment
தேமுதிக
, திங்கள், 4 மார்ச் 2019 (12:01 IST)
அதிமுக மற்றும் தேமுதிக இடையிலானக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை உறுதி செய்யும் விதமாக மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை  இன்று தலைமைக் கட்சி அலுவலகத்தில்  கட்சி நிர்வாகிகளுடன் நடக்க இருக்கிறது.
  
தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தேமுதிக வின் ஒவ்வொரு நடவ்டிக்கைகளும் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. தேமுதிகவை திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளில் யார் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவரப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் இருந்து திமுக விலகிக் கொண்டது.
 
எனவே அதிமுக மற்றும் தேமுதிக இடையிலானக் கூட்டணிக்கே சாத்தியம் அதிகம் எனக் கூறப்படுகிறது. பாமகவிற்கு கொடுத்தது போலவே, 7 சீட்டாவது வேண்டும் என்று தேமுதிக விடாப்பிடியாக உள்ளது. அவர்கள் கேட்கும் 7 சீட்டை கொடுத்துவிட்டால் மொத்தமாக 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கே கொடுக்கவேண்டிய நிலை அதிமுகவிற்கு ஏற்படும்(பாஜக - 5, பாமக-7) தேமுதிக கேட்கும் 7 என மொத்தம் 19 தொகுதிகள்.
webdunia
தேமுதிகவின் சூட்டை குறைக்க 5 சீட் மற்றும் 150 கோடி ரூபாய் தேர்தல் நிதி கொடுக்க அதிமுக டீல் பேசி வருகிறதாம். சரி இதுஒருமுறமிருக்க, வருகிற இடைத்தேர்தலில் தேமுதிகவிற்கு 2 தொகுதிகள் வழங்கியே ஆக வேண்டும் என அதிமுகவிற்கு செக் வைத்துள்ளதாம் தேமுதிக. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் அதிமுக திணறி போயுள்ளது.
 
சரியான நேரத்தை பயன்படுத்திக்கொண்டு, தேமுதிக அதிமுகவை படாதபாடு படுத்துகிறது என அதிமுகவை சேர்ந்த பலர் மனம் நொந்து போயுள்ளனராம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபிநந்தன் பிடிபடவில்லை; மோடிதான் அனுப்பி வைத்தார் – நெட்டிசன்ஸ் ரவுசு !