Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்காளர் பட்டியலில் குளறுபடி : திமுக புகார்!

Advertiesment
வாக்காளர் பட்டியலில் குளறுபடி : திமுக புகார்!
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (14:03 IST)
தி.மு.கழக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் தலைமைச் செயலகத்தில் புகார் மனு. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி குறித்து புகார் மனு.

 
மீண்டும் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடி உள்ளதாகவும், வாக்காளர் பெயர், வசிக்கும் இடம்,பகுதி, உள்ளிட்ட அனைத்து தகவலும் மதர் ரோல் என்று கூறப்படும் பட்டியலில் முழுமையாக இடம் பெற்றிருக்கும். 
 
ஆனால் சப்ளிமெண்டரி பட்டியலில் முழுமையான தகவல் இடம்பெறவில்லை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் அந்தப் பட்டியல் வைத்துத்தான் தேர்தல் பணிகளில் ஆயத்தமாக முடியும். கடந்த தேர்தலில் முழுமையான விலாசம் வெளியிடப்பட்டிருந்தது. இப்பொழுது எங்கு வசிக்கிறார்கள் , சரியான விலாசம் பகுதி, போன்ற தவறுகளை  சுட்டிக் காட்டி மனு கொடுத்துள்ளோம்.
 
தேர்தல் ஆணையம் , மாவட்ட தேர்தல் அதிகாரிகளை அறிவித்து இருக்கிறார்கள், அதேபோன்று உதவி தேர்தல் அதிகாரி பட்டியல் பெயர் அறிவிக்கவில்லை,  தொடர்பு எண், வாட்ஸ்அப் நம்பர் ,இமெயில் ஐடி அறிவிக்கவில்லை இதெல்லாம் அறிவித்தால் தான், சம்பந்தப்பட்ட இடங்களில் நடைபெறும் தவறுகளை புகார் தெரிவித்து ஏதுவாக இருக்கும் ,ஆனால் இதுவரை இந்தப் பட்டியல் வெளியிடப்படவில்லை.
 
டி ஆர் ஒ, ஏ ஆர் ஒ அலுவலர்களை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இது அனைத்தையும் குறித்து அமைப்புச் செயலாளரின் மனுவை பெற்று புகார் மனுவாக தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம் இதுபற்றி உடனடியாக பரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளார் என்று கிரிராஜன் தெரிவித்தார். தலைமை கழக வழக்கறிஞர்கள் பா. கணேசன். ஜெ.பச்சையப்பன் உடன் இருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுத்துறையை மொத்தமா அழிச்சிடுவாங்க போல..! – கே.எஸ்.அழகிரி கண்டனம்!