Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர் ராஜகோபாலன் ஆர் எஸ் பாரதியின் உறவினரா? அவதூறு புகார் அளித்த திமுக வழக்கறிஞர் அணி!

ஆசிரியர் ராஜகோபாலன் ஆர் எஸ் பாரதியின் உறவினரா? அவதூறு புகார் அளித்த திமுக வழக்கறிஞர் அணி!
, வியாழன், 27 மே 2021 (08:07 IST)

பத்மா ஷேசாத்ரி பள்ளி பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதியின் உறவினர் என்ற பொய்யான தகவல் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டது.

இதையடுத்து இப்போது அது சம்மந்தமாக திமுக வழக்கறிஞர் சூர்யா வெற்றிக்கொண்டான் அளித்துள்ள புகாரில் ‘சென்னையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு அதன்மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து அவரைபோக்சோசட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

குறிப்பாக நாராயணன் சேஷாத்திரி என்பவர், கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் என்ற ஆசிரியர், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு உறவினர் என்றும், அதனால் இந்த வழக்கை மூடி மறைத்து விடுவார்கள் என்றும், பொதுவெளியில் ஒரு சமூக வலைதளத்தில் (Face Book) தன்னுடைய கூற்றுக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல், தான் கூறுவது பொய் என்று உணர்ந்தோ அல்லது அதன் உண்மை குறித்து ஆராயாமலோ தன்னுடைய சித்தாந்தத்திற்கு எதிர்க்கருத்து கொண்டவர் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பெயரைக் கெடுக்கும் எண்ணத்தோடு இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்து பலரும் பகிர்ந்து வருவதால் பலதரப்பினரிடமும் அவதூறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. எனவே, மேற்கூறிய நாராயணன் சேஷாத்திரி மற்றும் அதைப் பின்பற்றி சமூக வலைதளங்களில் மீள் பதிவு செய்தோர்மீது உடனடி நடவடிக்கை எடுத்து இந்தப் பதிவுகளை நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்என தெரிவிக்கப்பட்டுள்ளது


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலெக்டர் மிரட்டலால் விருப்ப ஓய்வு பெற விரும்பும் விருதுநகர் மருத்துவமனை டீன்!