வழக்குகளை சட்டப்படி எதிர்க்கொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த ஜெயகுமாருக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுதலையானதும், திமுக பொறுப்பேற்ற நாளில் இருந்து அதிமுகவை அழித்துவிட வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார். திமுக அரசு தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. அதிமுகவின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.
இந்நிலையில் வழக்குகளை சட்டப்படி எதிர்க்கொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த ஜெய்குமாருக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. நில அபகரிப்பு, பொது வெளியில் அராஜகம், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் ஜெயக்குமார் மீது தொடரப்பட்டுள்ளது. வழக்குகளில் நீதிமன்றத்தில் வாதாடித்தான் தன்னை நிரபராதி என்று ஜெயக்குமார் நிரூபிக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.