Publish Date: Mon, 22 Mar 2021 (20:55 IST)
Updated Date: Mon, 22 Mar 2021 (21:00 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இன்று பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமாரின் சமக ஐஜேகேயுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்தது.
இந்நிலையில், சமக வேட்பாளர் முரளி கிருஷ்ணன் திமுகவில் இணைந்துள்ளார். இது அக்கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருந்த சமத்துவ கட்சி வேட்பாளர் முரளி கிருஷ்ணன் திமுகவில் இணைந்துள்ளார்.
மநீம கூட்டணியில் சமகவுக்கு 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் மூன்று தொகுதிகளை ஏற்கனவே சரத்குமார் திருப்பி அளித்தார். இந்நிலையில் தற்போது ஒருவர் கட்சி மாறியதால் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.