Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்மாயில் மீன் பிடிப்பதற்காக சட்டவிரோதமாக மடையைத் திறந்து விட்ட திமுக நகர செயலாளர்.

Advertiesment
Fish
, செவ்வாய், 17 மே 2022 (23:25 IST)
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் மீன் பிடிப்பதற்காக சட்டவிரோதமாக மடையைத் திறந்து விட்ட திமுக நகர செயலாளர்..கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் விவசாயிகள் கவலை. அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் வாளைக்குளம் கண்மாய் உள்ளது. இதன் அருகே சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் கண்மாய் நீரை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த கண்மாயில் மீன் பாசி ஏலம் கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில் அரசுக்கு வருவாய் ஈட்டக்கூடிய கண்மாயை ஏலம் விடுவதற்கு பல்வேறு தரப்பினர் மூலம் கோரிக்கை எழுந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு வாளைக்குழம் கண்மாயில் மீன் பாசி ஏலம் 31 லட்சத்திற்கும் மேல் ஏலம் விடப்பட்டது.இந்த ஏலத்தை எடுத்தவர் மம்சாபுரம் திமுக நகர செயலாளர் உதயசூரியன்.இவரது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இதுவரை ஏலப்பணம் கட்டாததால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்த சூழ்நிலையால் ஏழாம் ரத்து செய்யப்பட்டதாக மீன்வளர்ப்பு துறை அறிவிப்பு செய்யப்பட்டது.
 
ஆனால் திமுக நகர செயலாளர் உதயசூரியன் அரசுக்கு பணம் கட்டாமல் தற்போது மீன் பிடிப்பதற்காக விவசாய பாசனத்திற்க்கு சேர்த்து வைத்த நீரை சட்டவிரோதமாக மடையை திறந்து விட்டு நிரை வெளியேற்றி மீன் பிடித்து வருகிறார்.இது வரையுலும் லட்சகணக்கில் வருவாய் ஈட்டி அரசு பணத்தை கொள்ளையடித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 
திமுக நகர செயலாளர் உதயசூரியன் மீன் பிடிக்க மடையைத் திறந்து விட்டதால் நீரானது விவசாய நிலங்களுக்குள் புகுந்தும் சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியும் வீணாக செல்கிறது.
 
இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, மீன்வளத்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபட வில்லை எனவும் அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக அரசு தலையிட்டு சட்டவிரோதமாக செயல்படும் திமுக நகர செயலாளர் உதயசூரியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகளின் நீர் வளத்தை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
பேட்டி : கருப்பையா ( விவசாயிகள் சங்க தலைவர் )

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவிக்கு சேலை கட்ட தெரியாததால் கணவர் தற்கொலை !