Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துரைமுருகனுடன் சிரித்து மகிழும் கருணாநிதி: வைரல் புகைப்படம்!

துரைமுருகனுடன் சிரித்து மகிழும் கருணாநிதி: வைரல் புகைப்படம்!

Advertiesment
துரைமுருகனுடன் சிரித்து மகிழும் கருணாநிதி: வைரல் புகைப்படம்!
, புதன், 27 செப்டம்பர் 2017 (18:56 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீட்டில் ஓய்வில் உள்ளார். இதனால் கட்சியை வழி நடத்த செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.


 
 
அவ்வப்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் குணமடைந்து கோபாலபுரம் வீட்டுக்கு கொண்டு வரப்படும் கருணாநிதி முதுமையால் அரசியலில் ஈடுபட முடியாமல் இருக்கிறார். தற்போது பேச முடியாமல் இருக்கும் கருணாநிதியின் சட்டசபை பவளவிழா சமீபத்தில் திமுகவினரால் கொண்டாடப்பட்டது.
 
இந்த சூழலில் நேற்று டிஜிபி சிறப்பு போலீசார் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்ட வழக்கமான நடைமுறையால் கருணாநிதி குறித்து வதந்தி பரவியது. ஆனால் இது வதந்திதான் என்பதை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நிரூபித்தார்.
 
திமுக தலைவர் கருணாநிதி நலமாக கோபாலபுரம் இல்லத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் மற்றொரு புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆர்வமாக பேசி வாய்விட்டு சிரிக்கிறார். அவருடன் கருணாநிதியும் சிரிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கள் தலைவர் சிரிக்கும் புகைப்படத்தை பார்த்து திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி மாணவி கற்பழித்து கொலை: 7 பேருக்கு மரண தண்டனை!