தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றி உறுதியாகி உள்ள நிலையில், திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
தமிழகத்தில் 39 இடங்களில் திமுக கூட்டணியும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால், அவர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து அவர் முன்னிலையில் இருந்து வருவதால் திமுக தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.