Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

Advertiesment
கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து வழக்கு!
, வியாழன், 1 ஜூலை 2021 (07:42 IST)
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அசோக்குமாரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
 
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அசோக்குமார் 794 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செங்குட்டுவன் என்பவரை தோற்கடித்தார். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது 605 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துவிட்டதாக திமுக வேட்பாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அசோக்குமார் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வேட்புமனுவில் தன்னுடைய நிலம் தொடர்பாக தகவலை அசோக்குமார் மறைத்துள்ளதாகவும் எனவே அசோக்குமார் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவறான தகவலை பரப்ப கட்டளை: பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!