Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதியை பார்க்க பிரதமர் மோடி இன்று வருகையா?

கருணாநிதியை பார்க்க பிரதமர் மோடி இன்று வருகையா?
, செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (08:02 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். வயது முதிர்வு காரணமாக சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி சென்னை வரவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அதன் பின்னர் பிரதமருக்குரிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நேற்றிரவு காவல்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் காவேரி மருத்துவமனைக்கு வரும் வி.ஐ.பி.களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
 
webdunia
பிரதமர் மோடி தவிர கிட்டத்தட்ட முக்கிய விவிஐபிக்கள் அனைவரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். எனவே இன்று பிரதமர் மோடி சென்னை வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவசரமான காலகட்டங்களில் பந்தோபஸ்து பணிக்கு அதிகளவு போலீஸார், பணியில் இருக்க வேண்டும் என்பதற்காக போலீஸார் விடுப்பில் செல்லாமல் இருக்கவும், விடுப்பில் உள்ளவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பவும் அந்தந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள்: காவேரி மருத்துவமனை முன் பரபரப்பு