Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசுக்கு எதிராக இன்று திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:20 IST)
கோப்புப் படம்

திமுக கூட்டணிக் கட்சிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் ஈடுபட உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments