Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? முழு விபரங்கள்!

Advertiesment
திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? முழு விபரங்கள்!
, ஞாயிறு, 7 மார்ச் 2021 (11:02 IST)
திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு கிட்டதட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களைப் பார்ப்போம்
 
காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இடது கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளும், மதிமுகவுக்கு 6 தொகுதிகளும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகளும், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், ஒதுக்கப்பட்டுள்ளன 
 
இன்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போக மீதி உள்ள 178 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என தெரிகிறது 
 
வழக்கத்தைவிட இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக கொடுத்துள்ள திமுக அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் திமுக சின்னத்தில் தான் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமான சில நாட்களில் இறந்த மணமகள்…. சோகத்தில் உறைந்த திருமண வீடு!