Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியிலும் சிக்கல்.. தொகுதி உடன்பாட்டில் கருத்துவேறுபாடு என தகவல்..!

Mahendran
சனி, 10 பிப்ரவரி 2024 (11:21 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் இந்த தேர்தலிலும் இருக்கும் நிலையில் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்த எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்குவதில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் குறிப்பாக கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக இந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டு இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் இருப்பதாக தெரிகிறது.

ஆனால் கூட்டணி கட்சிகள் கடந்த முறை வாங்கிய தொகுதிகளை விட அதிக தொகுதிகள் வாங்க வேண்டும் என்பது மட்டுமின்றி சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய தொகுதிகளிலும் கேட்டு வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை 6 தொகுதிகள் மட்டுமே ஒடுக்கப்படும் என்றும் வேறு சில கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஒரு தொகுதியை மட்டுமே கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொள்ளாத நிலையில் முதல்வருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த திட்டம் இடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.! தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments