Publish Date: Wed, 17 Apr 2019 (20:31 IST)
Updated Date: Wed, 17 Apr 2019 (20:35 IST)
தமிழகத்தில் வேலூர் தவிர மீதியுள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அவற்றுடன் 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.
நேற்றுடன் பிரச்சாரம் முடிந்து அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் இன்று ஓய்வு எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றாகிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் என்பவர் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் தனது மனைவியுடன் இன்று காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற கார் நல்லிபாளையம் அருகே விபத்திற்குள்ளாகியது. இந்த விபத்தில் சின்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த சின்ராஜ், அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.