Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உச்சநீதிமன்றம் சென்ற திமுக..

Arun Prasath
திங்கள், 9 டிசம்பர் 2019 (11:40 IST)
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என திமுக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

தொகுதி மறுவரையறை செய்யப்படாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் அறிவித்தது.

இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது திமுக. மேலும் திமுகவின் கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.

இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் திமுக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments